முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தில்லி வீரர்களை கட்டியணைத்து ஆறுதல்படுத்திய ஷாருக் கான்!

கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Published On :

கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுக்க, தில்லி அணி 17.2 ஓவா்களில் 166 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 106 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் வீரர்களை சந்தித்து பேசினார். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தினை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார் ஷாருக்கான்.

தில்லி அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை தலையை ஆட்டி கட்டிப்பிடிப்பார். இந்த புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கார் விபத்துக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் விளையாடும் ரிஷப் பந்த் 25 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சூப்பர் ஸ்டிரைக்கர் விருதினை பெற்றார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.