சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எனது பயோபிக்கில் இந்த நடிகர் நடிக்க வேண்டும்: ஜோஸ் பட்லர்

தனது பயோபிக்கில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க வேண்டுமென ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

News image
ஜோஸ் பட்லர் - படம் | ஐபிஎல்
Updated On :13 ஏப்ரல் 2024, 12:56 pm

DIN

தனது பயோபிக்கில் (வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்) பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க வேண்டுமென ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் டிரெண்ட் போல்ட் தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிடித்த நடிகர்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளனர்.

கேள்வி மற்றும் பதில் அடிப்படையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தனது பயோபிக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஜோஸ் பட்லர், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட்டிடம் கடைசியாக உங்களது தொலைபேசியில் இணையத்தில் எதைத் தேடினீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு, டிரண்ட் போல்ட் டிஸ்மிஸிங் ஜோஸ் பட்லர் என்பதைத் தேடியதாக நகைச்சுவையாக பதிலளித்தார் போல்ட்.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் குறித்த கேள்விக்கு, இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது, அவர்களை நோக்கி கையசைப்பது, காற்றில் முத்தங்களை பறக்க விடுவது என மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக போல்ட் தெரிவித்தார். அதேபோல லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய வீரர் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறந்த கவர் டிரைவ் குறித்த கேள்விக்கு பதிலளித்த பட்லர், விராட் கோலியின் கவர் டிரைவ் சிறப்பாக இருக்கும் என பதிலளித்தார்.

கிரிக்கெட்டராக ஆகவில்லையென்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என்ற கேள்விக்கு, தபால்காரர் ஆகியிருப்பேன் என போல்ட் பதிலளித்தார்.

பேஷ்பால் கிரிக்கெட் அல்லது ஜெய்ஸ்பால் கிரிக்கெட் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் அதிக ரன்களைக் குவித்தது சோகமாக இருந்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரராக அவரது ஆட்டத்தை நான் வரவேற்கிறேன் என பட்லர் பதிலளித்தார்.

புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசுபவர் யார் என்ற கேள்விக்கு, சன் ரைசர்ஸ் அணியின் புவனேஷ்வர் குமார் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசுபவர் என்றார் போல்ட்.

தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவர் ராஜஸ்தான் அணியில் இடம்பெற வேண்டும் என நினைத்தால் யார் இடம்பெற வேண்டும் என நினைப்பீர்கள் என்ற கேள்விக்கு, ரஷித் கான் ராஜஸ்தான் அணியில் இடம்பெற வேண்டும் என நினைப்பதாக ஜோஸ் பட்லர் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.