மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.

News image
மிட்செல் மார்ஷ்- படம் | ஐபிஎல்
Updated On :23 ஏப்ரல் 2024, 1:27 pm

DIN

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 4 போட்டிகளில் அவர் 61 ரன்கள் எடுத்துள்ளார். காயம் காரணமாக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பினார். இதனையடுத்து, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: மிட்செல் மார்ஷ் மீண்டும் அணியுடன் இணைவார் என நான் நினைக்கவில்லை. அவர் காயத்திலிருந்து குணமடைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவாக இருக்கிறது. அவர் குணமடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் எனத் தெரிகிறது. டி20 உலகக் கோப்பைக்காக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக நான் நினைக்கவில்லை என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.