சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

இதுவரை 99 போட்டிகளில் 3 சதம், 20 அரைசதங்களுடன் 3,088 ரன்கள் கில் குவித்துள்ளார்.

News image
ஷுப்மன் கில்- படம் | ஐபிஎல்
Updated On :24 ஏப்ரல் 2024, 9:32 am

DIN

ஐபிஎல் தொடரில் 100-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இன்று விளையாடவுள்ளார்.

தில்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நடப்பாண்டின் 40-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு 100-வது ஐபிஎல் போட்டியாகும்.

யு-19 உலகக் கோப்பைக்கு பிறகு 2018-ஆம் ஆண்டு முதல்முதலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கிய கில், 2021 வரை அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி கில்லை ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு 483 ரன்கள் குவித்து குஜராத் அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

2023-ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி 3 சதம், 5 அரைசதம் உள்பட 890 ரன்கள் குவித்து, தொடர் நாயகம் விருதையும் கில் வென்றார்.

இதுவரை ஐபிஎல் தொடரில் 99 போட்டிகளில் விளையாடி 3 சதம், 20 அரைசதங்களுடன் 3,088 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 25-வது இடத்தில் உள்ளார்.

குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய நிலையில், தற்போது குஜராத் அணியின் கேப்டனாக கில் செயல்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.