ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!
தில்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 257 ரன்கள் எடுத்துள்ளது.


ஐபிஎல் போட்டியின் 43-ஆவது போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 257 ரன்கள் குவித்தது.
தொடக்க முதலே அதிரடியாக ஆடிய தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் 84 ரன்கள் அடுத்து அசத்தினார்.
அபிஷேக் போரல் 36, சாய் ஹோப் 41, ரிஷப் பந்த் 29 எடுத்தார்கள். அக்ஷர் படேல் 11, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
மும்பை அணி சார்பாக லூக் வுட், பும்ரா, பியூஷ் சாவ்லா, மொகமது நபி தலா 1 விக்கெட் அடித்துள்ளார்கள்.
இதுதான் தில்லியின் அதிகபட்ச ஐபிஎல் ரன்கள் ஆகும். இதற்கு முன்பாக 2011இல் அதிகபட்ச 231 ரன்கள் எடுத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...