லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!
படம் | ஐபிஎல்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது.

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!
பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். மும்பை அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. ரோஹித் சர்மா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (10 ரன்கள்), திலக் வர்மா (7 ரன்கள்), ஹார்திக் பாண்டியா (0 ரன்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் இஷான் கிஷன் மற்றும் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை மும்பை அணியின் ஸ்கோரினை சற்று உயர்த்தியது. இருப்பினும், இஷான் கிஷன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய நேஹல் வதேரா 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!
கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. லக்னௌ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டாய்னிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com