பிரபல ஆர்சிபி வீரர் விராட் கோலி தன்னை ரசிகர்கள் கிங் கோலி என அழைக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் லண்டன் சென்ற அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்தது.
ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணியில் பயணித்து வரும் விராட் கோரி நாளை (மார்ச் 19) நடைபெறும் அந்த அணியின் 'அன்பாக்ஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அங்கு விராட் கோலி, “ என்னை ரசிகர்கள் ‘கிங் கோலி’ என அழைக்க வேண்டாம். அப்படி அழைக்கும்போது எனக்கு கூச்சமாக இருக்கிறது என டு பிளெஸ்ஸிடம் கூறியிருந்தேன். தயவு செய்து, இனிமேல் விராட் கோலி என்றே அழையுங்கள்" என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
The loud cheer from the crowd for #ViratKohli pic.twitter.com/OT8OIlktGL
— Aryan (@chinchat09) March 20, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







