மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் படம் | ஐபிஎல்

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதிடம் தோல்வியடைந்தது.

சூர்யகுமார் யாதவ்
ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

இந்த நிலையில், நேற்றையப் போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: என்ன ஒரு அருமையான போட்டி. நேற்றையப் போட்டி முழுமையான உற்சாகத்தைத் தந்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சிறப்பாக செயல்பட்டது. இறுதிவரை போராடிய ஒவ்வொரு மும்பை இந்தியன்ஸ் அணி வீரரை நினைத்தும் பெருமைப்படுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com