மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!
சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.


இந்த ஐபிஎல் தொடரின் 49ஆவது போட்டியில் சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் 8வது இடத்தில் இருக்கிறது.
சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 2-ஆவது இடத்துக்கு முன்னேறலாம்.
ருதுராஜ் இந்த ஐபிஎல் தொடரில் டாஸில் தோல்வியே சந்தித்து வருகிறார்.
பதிரானா, தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ஷர்துல், ரிச்சர்டு க்ளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
பஞ்சாப் அணியில் மாற்றங்கள் இல்லை.
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்டு க்ளீசனுக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும்.
36 வயதாகும் ரிச்சர்டு க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான அவரது அறிமுக டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை வீழ்த்தினார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் டி20 போட்டிகளில் இதுவரை 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல முதல் தர போட்டிகளில் 143 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அவரது வருகை சிஎஸ்கேவுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...