தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றாலும் புள்ளிப் பட்டியலில் நெட் ரன் ரேட்டினை காப்பாற்றியுள்ளார் தோனி.
தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!
Kunal Patil

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது.

முதலில் ஆடிய குஜராத் 231 ரன்கள் எடுக்க அடுத்து ஆடிய சிஎஸ்கே அணியினால் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப்-இல் நுழைய கடினமாகியுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல முடியும்.

தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!
தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

இந்தப் போட்டிக்கு முன்பு சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் 0.70 நெட் ரன் ரேட்டை வைத்திருந்தது. குஜராத் உடனான தோல்வியினால் தற்போது 0.491 க்கு குறைந்துள்ளது.

ராஜஸ்தான் (0.476), சன்ரைசர்ஸ் (0.406) அணியின் நெட் ரன் ரேட் சென்னையைவிட குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தோனியின் அதிரடியே.

கடைசியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அதிரடியாக அடித்து அசத்தினார் தோனி. ஸ்டிரைக் ரேட் 236.66. இந்தப் போட்டியின் சிறந்த ஸ்டிரைக் ரேட்டுக்கான விருதும் தோனிக்கே தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோனியின் சார்பாக அந்த விருதினை ருதுராஜ் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com