ஐபிஎல் தொடரில் அசத்தும் தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் பாராட்டுகள்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்படம்: எக்ஸ் / சாய் சுதர்சன்
Published on
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சின்னசாமி திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக 4ஆவது அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேசில்வுட் பந்தில் கீப்பருக்கு மேலாக ரேம்ப் ஷாட்டில் ஆட்டமிழந்தார்.

28 இன்னிங்ஸில் 1 முறை மட்டுமே ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்துள்ளார்.

மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் இவருக்கு இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 186 ரன்களை குவித்து அதிக ரன்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 189 ரன்களுடன் நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,220 ரன்களை எடுத்துள்ளார். 8 அரைசதங்கள், 1 சதத்துடன் சராசரி 48.8ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வட இந்திய ஊடகங்களிலும் சாய் சுதர்சனை “மிஸ்டர் கன்சிஸ்டன்ட்” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

தொடக்க கால ஐபிஎல் போட்டிகளில் ஸ்டிரைக் ரேட் பிரச்னை இருந்தது. தற்போது, அதிரடியாகவும் விளையாடுவதால் சாய் சுதர்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com