பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.

எம்.எஸ்.தோனி - படம் | ஜியோ ஹாட்ஸ்டார்

Published On :

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கேவின் தொடர்ச்சியான தோல்விகள் ஒருபுறமிருக்க, எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்குவது நடப்பு ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது. அதன் பின், தோனியின் உடல் முன்பு போன்று இல்லை, அவர் பேட்டிங் செய்யும் இடத்தை ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரே முடிவு செய்வார் என பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் கடந்த போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியை தோனியின் பெற்றோர் நேரில் காண வந்திருந்தனர். இதனால், தில்லிக்கு எதிரான போட்டியுடன் தோனி ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் பரவின. ஆனால், ஓய்வு குறித்து தோனியே முடிவு செய்வார் என தெரிவித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஃபிளெமிங்.

ஓய்வு குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி

ஐபிஎல்-லிருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான முடிவை எடுக்க இன்னும் 10 மாதங்கள் இருப்பதாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: நான் இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் விளையாடுகிறேன். எனக்கு தற்போது 43 வயதாகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் முடிவில் எனக்கு 44 வயதாகி இருக்கும். அதனால், அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவதைக் காட்டிலும், எனது உடல்தான் நான் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 76 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.