தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விராட் கோலி, ரஜத் படிதார் அசத்தல்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | AP
Updated On :7 ஏப்ரல் 2025, 4:04 pm

DIN

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆர்சிபி முதலில் விளையாடியது.

விராட் கோலி, ரஜத் படிதார் அரைசதம்

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தத் படிக்கல். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், படிக்கல் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதனையடுத்து, விராட் கோலியுடன் கேப்டன் ரஜத் படிதார் இணைந்தார். இந்த இணை அபாரமாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா அதிரடியாக 19 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் டிரெண்ட் போல்ட் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விக்னேஷ் புதூர் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.