திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேகேஆர் அணிக்காக சுனில் நரைன் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக சுனில் நரைன் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

சுனில் நரைன் - படம்: எக்ஸ் / கேகேஆர்.

Updated On :12 ஏப்ரல் 2025, 3:47 pm IST

சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக அதிகமாக ஆட்ட நாயகன் விருதுவென்ற வீரராக புதிய சாதனை படைத்தார்.

நேற்றிரவு சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சிஎஸ்கே பேட்டர்களை திணறடித்தார்.

4 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 18 பந்துகளில் 44 ரன்கள் குவித்து மிரட்டினார். அதனால், ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

ஐபிஎல் வரலாற்றில் இது சுனில் நரைனுக்கு 16ஆவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக கேகேஆர் அணிக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

ரஸ்ஸலை முந்தி சுனில் நரைன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருது வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக கிறிஸ் கெயில் (22), ரோஹித் சர்மா (19), விராட் கோலி (18), வார்னர் (18), தோனி (17) இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.