திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

84% கட்டுப்பாட்டுடன் விளையாடிய ஜெய்ஸ்வால்: 11-ஆவது அரைசதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஸ்வால் அரைசதமடித்தார்.

News image

ஜெய்ஸ்வால் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :13 ஏப்ரல் 2025, 4:46 pm IST

ஜெய்பூரில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பேட்டிங் செய்துவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 107/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்த சீசனில் சுமாராக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

50 ஐபிஎல் போட்டிகளில் 1,700க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள ஜெய்ஸ்வால் தற்போது 11ஆவது அரைசதத்தினை நிறைவு செய்துள்ளார்.

ஜெய்பூர் திடலில் தனது 3ஆவது அரைசதத்தையும் இதன் மூலம் நிறைவு செய்துள்ளார்.

சுழல்பந்துகளுக்கு சாதகமான ஜெய்பூர் பிட்ச்சில் 84 சதவிகிதம் கட்டுப்பாட்டில் விளையாடி வருகிறார்.

தேவையில்லாமல் பேட்டினை சுற்றாமல் பந்தினைப் பார்த்து அடித்து சிறப்பாக விளையாடி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.