ஐபிஎல் தொடரின் 18-வது சீசனின் இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி இன்றிரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் களம் காணவுள்ளன. பெங்களூரு 4-ஆவது முறையாகவும், பஞ்சாப் 2-ஆவது முறையாகும் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளன.
ஐபிஎல் வரலாற்றில், சாம்பியன் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் சந்திப்பது, 9 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், 2016-இல் இதேபோல் ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதியபோது, ஹைதராபாத் சாம்பியனானது.
இந்த சீசனில் பெங்களூரு - பஞ்சாப் 3 முறை மோதியிருக்க, பெங்களூரு 2-1 என முன்னிலை வகிக்கிறது. லீக் சுற்று முடிவில் இரு அணிகளுமே தலா 19 புள்ளிகளுடன் முதலிரு இடங்களைப் பிடித்து சமபலத்துடன் இருந்தது.
18 ஆண்டுகளாகவே கோப்பை கைக்கு எட்டாத வகையில் இருப்பது, பெரும் ரசிகா் பட்டாளம் கொண்டிருக்கும் பெங்களூரு அணிக்கும், அதன் நட்சத்திர வீரா் விராட் கோலிக்கும் நெருடலாகவே இருந்து வருகிறது.
தற்போது, 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதி ஆட்டத்துக்கு பெங்களூரு வந்துள்ளது.
2008 - ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிரணி - சென்னை சூப்பர் கிங்ஸ்)
2009 - டெக்கன் சார்ஜர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2010 - சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை இந்தியன்ஸ்)
2011 - சென்னை சூப்பர் கிங்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
2013 - மும்பை இந்தியன்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பஞ்சாப் கிங்ஸ்)
2015 - மும்பை இந்தியன்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2017 - மும்பை இந்தியன்ஸ் (ரைசிங் புணே சூப்பர் ஜெயிண்ட்)
2018 - சென்னை சூப்பர் கிங்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
2019 - மும்பை இந்தியன்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
2020 - மும்பை இந்தியன்ஸ் (தில்லி கேபிடல்ஸ்)
2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
2022 - குஜராத் டைட்டன்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் (குஜராத் டைட்டன்ஸ்)
2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண ஆர்சிபி ரசிகர்கள் நரேந்திர மோடி திடலில் குவிந்து வருகிறார்கள்.
அகமதாபாதில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு தற்போதே ரசிகர்கள் செல்லத் தொடங்கியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கு 5 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளது.
முழுமையாக ரத்தானால், புதன்கிழமை மாற்றுநாளில் போட்டி நடத்தப்படும். அதேபோன்று மாற்றுநாளிலும் மழை பெய்து போட்டி முழுமையாக ரத்தாகும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் பஞ்சாப் அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும்.
இதையும் படிக்க: ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்விக்கு, “நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் எல்லாமே தோற்கின்றன. இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு” என சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார். அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். விராட் கோலிக்காக ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகரில் பல கோயில்களிலும் சிவப்பு நிற ஆடையணிந்த பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ஐபிஎல் நிறைவு விழாவில் ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விமான அணிவகுப்பு நடைபெற்றது. பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற 8 போட்டிகளில் 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், டாஸ் வெல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்யாமல், கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன.
பெங்களூரு
ரஷிக் சலாம், மனோஜ் பந்தேஜ், டிம் செய்ஃபர்ட், ஸ்வப்னில் சிங், சுயாஷ் சர்மா.
பஞ்சாப்
பிரப்சிம்ரன் சிங், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், ஹர்ப்ரீத் ப்ரார்.
ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எந்த ஒரு தவறுமின்றி அற்புதமாக கேட்ச் செய்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.
நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
26 ரன்களில் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் ரஜத் பட்டிதார்...
43 ரன்களில் அஸ்மத்துல்லா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி...
லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஆட்டமிழந்து வெளியேறினர். அணியின் ஸ்கோர் - 171/6
அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஷெப்பர்ட்...
அணியின் ஸ்கோர் - 188/7 (19.2 ஓவர்கள்)
அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் க்ருணல் பாண்டியா...
அணியின் ஸ்கோர் - 189/8 (19.4 ஓவர்கள்)
ஆர்சிபி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் திரட்டியது...
2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள்...
ஆர்சிபியின் துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா வெறும் 10 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி வீரர்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டான 240-இல் விளையாடி அசத்தினார்.
43 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது பஞ்சாப் கிங்ஸ்...
8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் குவித்த பஞ்சாப் கிங்ஸ்...
72 ரன்களில் 2-ஆவது விக்கெட்டை பறிகொடுத்த பஞ்சாப் கிங்ஸ்...
1 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்...
18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபிஎல் கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.