ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மும்பை இந்தியன்ஸ் ஒரு டீசல் என்ஜின்..! வருண் ஆரோன் புகழாரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து வருண் ஆரோன் கூறியதாவது...

News image

மும்பை இந்தியன்ஸ் அணி - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்

Updated On :1 மே 2025, 11:59 am IST

மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து முன்னாள் வீரர் வருண் ஆரோன் புகழ்ந்து பேசியுள்ளார்.

புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்து வருகிறது.

6ஆவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான அணி இன்றிரவு (மே.1) ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதும் மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து வருண் ஆரோன் கூறியதாவது:

மும்பை இந்தியன்ஸ் ஒரு டீசல் என்ஜினைப் போல ஒரு முறை சூடாக ஆரம்பித்தால், அவர்கள் எதிரிகளை ஒருவழியாக அழிக்கத் துவங்கிவிடுவார்கள்.

மும்பை இதியன்ஸ் இலக்கை கடைசிவரை இழுத்துச் செல்லாமல் சீக்கிரமே முடிக்க விரும்புவார்கள்.

ராஜஸ்தான் அதனைத் தடுக்க மற்றொரு ‘பேபியின் டே அவுட்’ (வைவப் சூர்யவன்ஷியைக் குறிப்பிடுகிறார்) மாதிரியான அதிசய ஆட்டம் ஒன்றை நம்ப வேண்டியிருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.