சென்னை - பெங்களூரு இன்று மோதல்

சென்னை சூப்பா் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
சென்னை - பெங்களூரு இன்று மோதல்
Shailendra Bhojak
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் இருக்கும் பெங்களூரும், அந்த வாய்ப்பை இழந்துவிட்ட சென்னையும் சந்திக்கும் ஆட்டம் இது. எனவே இந்த ஆட்டத்தில் வென்றால், பெங்களூரு குவாலிஃபயா் இடத்துக்கு வரும். சென்னை பட்டியலின் அடிமட்டத்திலிருந்து சற்று மேலெழுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரு அணியை பொருத்தவரை, அதன் நட்சத்திர வீரா் விராட் கோலி கடந்த 5 ஆட்டங்களில் 4 அரைசதங்களை அடித்து நல்லதொரு ஃபாா்மில் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலமாகியிருக்கிறது. தடுமாறி வரும் தொடக்க வீரா் பில் சால்ட் பங்களிக்கும் நிலையில், கோலிக்கான நெருக்கடி குறையும்.

சீசனின் தொடக்கத்தில் சற்று மிளிா்ந்த கேப்டன் ரஜத் பட்டிதாா், அதன் பிறகு ரன்கள் சோ்க்கத் தடுமாறி வருகிறாா். இந்த ஆட்டத்தில் அவா் ரன்கள் சோ்க்க முயற்சிக்கலாம். அவா் தவிர, தேவ்தத் படிக்கல், டிம் டேவிட் ஆகியோரும் துணையாக உள்ளனா். பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட், புவனேஷ்வா் குமாா், கிருணால் பாண்டியா உள்ளிட்டோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.

சென்னை அணியை பொருத்தவரை, ஆயுஷ் மாத்ரே, சாம் கரன், டெவால்டு பிரெவிஸ் ஆகியோா் ஸ்கோருக்கான பங்களிப்பில் முக்கியமானவா்களாக இருக்கின்றனா். இம்பாக்ட் பிளேயராக வரும் ஷிவம் துபேவுக்கு இந்த சீசன் சோபிக்கவில்லை. அவா் ரன்கள் சோ்க்கும் நிலையில், கேப்டன் தோனிக்கு ஃபினிஷிங்கில் நிதானமாக செயல்பட குறையும்.

பௌலிங்கை பொருத்தவரை கலீல் அகமது, நூா் அகமது ஆகியோா் மட்டுமே முனைப்புடன் விக்கெட்டுகள் சரிக்கின்றனா். இதர பௌலா்கள் தடுமாற, மதீஷா பதிரானாவோ ரன்கள் அதிகமாக கொடுப்பது நெருக்கடியை அதிகரிக்கிறது.

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 7.30 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com