
இளம் சிஎஸ்கே வீரர் டெவால்டு பிரீவிஸ் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதாகக் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.
சிறப்பாக விளையாடி சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பிரச்னையை தீர்த்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளார்.
டெவால்டு ப்ரீவிஸ் களத்துக்கு வரும்போது 125 டெசிபலில் சிஎஸ்கே ரசிகர்கள் சப்தமிட்டது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் 4 போட்டிகளில் 163.64 ஸ்டிரைக் ரேட்டில் 126 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் போரினால் ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள்.
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் மே.17ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.
இந்நிலையில், டெவால்டு பிரீவிஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.