ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் அவர்களது நாடுகளுக்குத் திரும்பினர். இதற்கிடையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் முடிவுக்கு வர, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே 17 முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இதையும் படிக்க: ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த வெளிநாட்டு வீரர்கள்!
ஆல்ரவுண்டர்கள் விளையாடவில்லை
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை மறுநாள் (மே 17) முதல் தொடங்கவுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது அணியுடன் மீண்டும் இணைந்து வருகிறார்கள்.
இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்களான மொயின் அலி மற்றும் ரோவ்மன் பௌவல் இருவரும் மருத்துவக் காரணங்களினால் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவக் காரணங்களினால் ரோவ்மன் பௌவல் மற்றும் மொயின் அலி ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மொயின் அலியின் குடும்ப உறுப்பினர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குணமடைந்து விரைவில் மீண்டும் நலம்பெற விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.
நாளை மறுநாள் (மே 17) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



