திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் தெரிவித்துள்ளார்.

News image

படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :16 மே 2025, 8:34 pm IST

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.

பயிற்சியை நிறுத்தவில்லை

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிந்ததால் நாங்கள் ஒருபோதும் பயிற்சியை நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது எங்களை பெரிதாக பாதிக்கவில்லை. ஏனெனில், தொழில்முறை கிரிக்கெட் வீரர்களான எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்திருந்தது. ஐபிஎல் தொடர் மீண்டும் கண்டிப்பாக தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எப்போது தொடங்கும் என்பதுதான் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. குறுகிய இடைவெளியிலேயே போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது சிறப்பான விஷயம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த அணியும் இங்கு இருக்கிறோம். அடுத்து விளையாடவுள்ள போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இனிவரும் போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியடையக் கூடாது. எங்களுக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமைந்திருக்கலாம். தொடரின் நடுவில் சில போட்டிகளில் தோல்வியடைந்தோம். இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எங்களுக்கு மீதமிருக்கின்றன. அனைவரும் சிறப்பாக செயல்பட்டு அந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என்றார்.

ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் நாளை (மே 17) பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.