பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
சூர்யகுமார் அரைசதம்; 185 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, ரியான் ரிக்கல்டான் 27 ரன்களும், கேப்டன் ஹார்திக் பாண்டியா 26 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா 24 ரன்களும், நமன் திர் 20 ரன்களும் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் மற்றும் விஜயகுமார் வைசாக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்பிரீத் பிரார் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராகும் ரெய்னா!
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரைசதம் விளாசிய சுரேஷ் குமார்; நெல்லை ராயல் கிங்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

ஜிஎஸ்எல்: 85 ரன்கள் இலக்கைக் கட்டுப்படுத்தி, த்ரில் வெற்றியுடன் கோப்பையை தக்கவைத்த கயானா!

மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

லார்ட்ஸ் டெஸ்ட்: 270 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



