
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, போட்டியில் இருந்து வெளியேறியது.
மொத்தம் 14 போட்டிகளில் 4 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது.
இந்த நிலையில், புகைப்படங்களைப் பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கலீல் அகமது வெளியிட்ட பதிவில், “அடுத்த முறை சந்திக்கும் வரை சென்னை மற்றும் சூப்பர் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசன் தொடக்கத்தில் சென்னை அணிக்காக அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, இரண்டாவது பாதியில் ஃபார்மை நீடிக்க முடியவில்லை.
மொத்தம் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள கலீல் அகமது, 46.4 ஓவர்கள் வீசி 447 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

படம்: கலீல் அகமது இன்ஸ்டாகிராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






