நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்டுமின்றி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்ட நிலையில், 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
பலம் வாய்ந்த அணிகளான பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளும் குவாலிஃபையர் 2 ல் விளையாடவிருக்கிறது. இதனால், ஆர்சிபியுடன் விளையாடப் போவது யார்? என்பதில் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் ஆர்சிபி வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபிடி வில்லியர்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நேற்றிரவு மும்பை அணி சிறப்பாக விளையாடி குவாலிஃபையர் 2-க்குத் தகுதி பெற்றிருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணமாகும்.
விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது சிறப்பானதாகும். இறுதிப் போட்டியைப் பார்ப்பதில் மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இந்தாண்டு ஆர்சிபி அணிக்கான ஆண்டாக உள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம்!

ஸ்பெயின் பின்தொடரும் கால்பந்தின் தத்துவம்... இறுதிப் போட்டி பற்றி மெஸ்ஸி கூறியதென்ன?

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



