ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா என்பது குறித்து ஷுப்மன் கில் கூறுவதென்ன? என்பதைப் பற்றி...
ஹார்திக் பாண்டியாவுடன்  ஷுப்மன் கில்!
ஹார்திக் பாண்டியாவுடன் ஷுப்மன் கில்!
Published on
Updated on
1 min read

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. மும்பை அணி குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் சுண்டுதலில்போது டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்பின்னர், குஜராத் அணியின் கேப்டனான கில்லிடம் கை கொடுக்கச் சென்றார்.

ஷுப்மன் கில்லின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி..
ஷுப்மன் கில்லின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி..

ஆனால், அவர் மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அதேபோல, ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்ததும், அவரை நோக்கி சப்தமாக கத்திக்கொண்டு ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் ஹார்திக் பாண்டியா.

இரு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த ஷுப்மன் கில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

டாஸின் போது கைக் கொடுக்காமல் சென்ற நிலையில், அவருக்கு தலைக்கணம் கூடிவிட்டதாக ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இது விவாதப் பொருளான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷுப்மன் கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் ஷுப்மன் கில்லின் பொறுப்பான பதில் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com