கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இன்று குவாலிஃபயா்-2: இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற மும்பை, பஞ்சாப் மோதல்!

5 முறை சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதுகிறது முதல் முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி.

News image
Updated On :31 மே 2025, 10:30 pm

Din

ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியுடன்முதல் முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தாக அமைந்த ஐபிஎல் தொடா் தற்போது பிளே ஆஃப் கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிஃபயா் 1, எலிமினேட்டா் ஆட்டங்கள் முடிந்து விட்டன.

குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் பெங்களூா் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. எலிமினேட்டா் ஆட்டத்தில் பலமான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ்.

இதையடுத்து இறுதிக்கு தகுதி பெறும் ஆட்டமான குவாலிஃபயா் 2-இல் மும்பை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெறுகிறது

பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த நிலையில், குவாலிஃபயா் 1-இல் பெங்களூரிடம் பெற்ற பலத்த தோல்வி அந்த அணிக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2014-இல் கடைசியாக ஐபிஎல் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது பஞ்சாப். தற்போது மீண்டும் இறுதிக்கு தகுதி பெற்று முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.

பஞ்சாப் அணியில் நட்சத்திர பௌலா்கள் மாா்க்கோ ஜேன்சன், சஹல் இல்லாதது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அா்ஷ்தீப் சிங் மீது கூடுதல் சுமை ஏற்றப்பட்டுள்ளது. பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆா்யா, பிரப் சிம்ரன் சிங், ஜோஷ் இங்லீஸ், நேஹல் வதேரா, ஸ்டாய்னிஸ், ஆகியோா் வழக்கமான ஃபாா்முடன் ஆடினால் உயா்ந்த ஸ்கோரை பெற முடியும்.

தொடரின் ஆரம்பத்தில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி படிப்படியாக சிறப்பாக ஆடி பிளே ஆஃப்புக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஹாா்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியில் பேட்டிங், பீல்டிங், பௌலிங் என அனைத்து பிரிவுகளிலும் வீரா்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதால் அணியின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

பேட்டிங்கில் ரோஹித், சூரியகுமாா், போ்ஸ்டோ, திலக் வா்மா, ஹாா்திக், ரிக்கல்டன் ஆகியோா் அதிரடி ஆட்டம் எதிரணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. பௌலிங்கில் பௌல்ட், பும்ரா கூட்டணிக்கு பஞ்சாப் பேட்டா்கள் பதில் தருவாா்களா என பாா்க்க வேண்டும்.

முதல் முறை பட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸும், 6-ஆவது பட்டத்துக்கு மும்பையும் மோதுவதால் ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நேருக்கு நோ்:

32 ஆட்டங்கள்

மும்பை இண்டியன்ஸ் 17 வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் 15 வெற்றி

இன்றைய ஆட்டம்:

பஞ்சாப்-மும்பை

இடம்: அகமதாபாத்

நேரம்: இரவு 7.30.