சூப்பர் ஓவர்: 5 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய 'யார்க்கர்' பூம்ரா

​மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 ரன்கள் எடுத்துள்ளது.
சூப்பர் ஓவர்: 5 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய 'யார்க்கர்' பூம்ரா


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தில் 2-வது பேட்டிங் செய்த பஞ்சாப் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கியது.

பஞ்சாப்புக்கு கேஎல் ராகுலும், நிகோலஸ் பூரனும் களமிறங்கினர். மும்பைக்கு பூம்ரா பந்துவீசினார். முதல் பந்தில் ராகுல் 1 ரன் எடுக்க, 2-வது பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது வீரராக தீபக் ஹூடா களமிறங்கினார். 3-வது பந்தில் ராகுல் 1 ரன் எடுக்க, 4-வது பந்தில் ஹூடா 1 ரன் எடுத்தார். ஹூடா 2-வது ரன் எடுக்க முயன்றபோது ராகுல் நிறுத்தினார்.

5-வது பந்தில் 2 ரன் கிடைக்க, கடைசி பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அனைத்து பந்துகளையும் பூம்ரா கச்சிதமாக யார்க்கராக வீசியதால் கடைசி பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார்.

இதனால், சூப்பர் ஓவரில் பஞ்சாப் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com