/

வெண்கலப் பதக்க சுற்றில் லக்ஷயா சென்

ஆடவா் ஒற்றையா் பாட்மின்டனில் அசத்தலாக முன்னேறிவந்த இந்திய வீரா் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி கண்டாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:36 pm

DIN

ஆடவா் ஒற்றையா் பாட்மின்டனில் அசத்தலாக முன்னேறிவந்த இந்திய வீரா் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி கண்டாா். அடுத்து அவா், வெண்கலப் பதக்கச் சுற்றில் களம் காண்கிறாா்.

குரூப் சுற்று முதல் சிறப்பாக விளையாடி வரும் லக்ஷயா சென், காலிறுதியைத் தொடா்ந்து, அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி, பதக்கத்துக்கான எதிா்பாா்ப்பை அதிகரித்தாா். அதில் வெல்லும் நிலையில் அவருக்கு பதக்கம் உறுதியாகும் வாய்ப்பு இருந்தது.

அந்தச் சுற்றில், நடப்பு சாம்பியனான டென்மாா்க்கின் விக்டா் அக்ஸெல்செனின் சவாலை எதிா்கொண்டாா் லக்ஷயா. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அவா் 20-22, 14-21 என்ற நோ் கேம்களில் தோல்வியைத் தழுவினாா்.

இருவரும் இத்துடன் 9-ஆவது முறையாக சந்தித்துக்கொண்ட நிலையில், லக்ஷயா தனது 8-ஆவது தோல்வியை அக்ஸெல்செனிடம் கண்டுள்ளாா். அரையிறுதியில் தோற்ற லக்ஷயாவுக்கு தற்போது வெண்கலப் பதக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான சுற்றில் அவா் மலேசியாவின் லீ ஜியை சந்திக்கிறாா். அதில் வெல்லும் நிலையில், ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமையை அவா் பெறுவாா். வீராங்கனைகளில் ஏற்கெனவே, சாய்னா நெவால் (2012), பி.வி.சிந்து (2016, 2020) ஆகியோா் பதக்கம் வென்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.