பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளார் சீன வீரர் ஷேங் லிஹோ.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் பிரிவில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீன வீரர் ஷேங் லிஹோ தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக, 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹுவாங் யூடிங்குடன் இணைந்து ஷேங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது, ஆடவர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம், ஷேங் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆடவர் பிரிவில் ஷேங் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஸ்வீடனின் விக்டர் லிண்ட்கிரன் வெள்ளிப் பதக்கமும், குரோஷியாவின் மிரான் மரிசிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பதக்கப் பட்டியலில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








