கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐபிஎல்: கேப்டன் பதவியிலிருந்து கம்பீர் விலகல்; புதிய கேப்டன் நியமனம்!

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கெளதம் கம்பீர் விலகியுள்ளார்...

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 10:55 am

எழில்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கெளதம் கம்பீர் விலகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது. தில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு வீழ்ந்தது.

இதையடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி, 6 ஆட்டங்களில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி அணி கேப்டன் கெளதம் கம்பீரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. மேலும் கடந்த ஐந்து ஆட்டங்களில் 85 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

இந்நிலையில், கேப்டன் பதவியிலிருந்து கெளதம் கம்பீர் விலகியுள்ளார். அணியின் மோசமான ஆட்டங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

இதையடுத்து 23 வயது ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

வெள்ளியன்று, டெல்லியில் நடைபெறுகிற ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி டேர்டெவில்ஸ்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.