தோனியின் முக்கிய முடிவுகள் குறித்து சுனில் கவாஸ்கர் கேள்வி!
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோவை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. இத்துடன் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்த இரு அணிகளில், கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றி. சென்னைக்கு இது 3-வது தோல்வி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஆட்டநாயகன் ஆனார்.
இதையடுத்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள சுனில் கவாஸ்கர், தோனியின் முக்கிய முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
டுபிளெஸ்ஸிஸைத் தொடக்க வீரராக அனுப்பும் உத்தியை தோனி மறுபரீசலனை செய்யவேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள அம்பட்டி ராயுடுவால் அதிக பந்துகளை எதிர்கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. நடுவரிசையில் களமிறங்குவதால் உடனடியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ராயுடு.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோவை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினம். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் நல்ல ஃபார்மில் உள்ளார் பிராவோ. அதேசமயம் ஜடேஜா ஓரளவு தடுமாறி வருகிறார். இரண்டு கேட்சுகளை நழுவவிட்டதில் அதைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...