இந்தியாவில் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஏடிபி 250 டென்னிஸ் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டது. 1996-இல் தில்லியில் முதல்முறையாக நடைபெற்ற இந்தப் போட்டி, அதன்பிறகு சென்னைக்கு இடம்பெயர்ந்தது. இது, "டைட்டில் ஸ்பான்சர்' அடிப்படையில் 1997 முதல் 2001 வரையில் கோல்டு பிளேக் ஓபன் என்றும், 2002 முதல் 2004 வரையில் டாடா ஓபன் என்றும் அழைக்கப்பட்டது. 2005 முதல் சென்னை ஓபன் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டி என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) பெருமையாகக் கூறிக் கொண்டாலும், அதனால் இந்திய டென்னிஸ் வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை. சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, சம்பந்தப்பட்ட விளையாட்டை பிரபலப்படுத்துவதுதான்.
ஆனால் இங்கு 22 ஆண்டுகள் ஏடிபி போட்டியை நடத்திய பிறகும்கூட ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவரால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. 2009-இல் சோம்தேவ் இறுதிச்சுற்று வரை முன்னேறியதே சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவரின் சாதனையாக இன்றளவிலும் உள்ளது. இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் 6 பட்டங்களையும், மகேஷ் பூபதி 5 பட்டங்களையும் வென்றுள்ளனர். இப்போது ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாம்பியனாகியிருக்கிறது. அதிலும், இந்த ஆண்டு இரட்டையர் பிரிவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஜோடிகள் யாரும் பங்கேற்கவில்லை.
மற்றபடி பார்த்தால் சென்னை ஓபனில் இந்திய வீரர்கள் எதையும் சாதிக்கவில்லை. இந்த முறை சென்னை ஓபனில் வைல்ட் கார்டு பெற்று விளையாடிய ராம்குமாரும், சாகேத் மைனேனியும் முதல் சுற்றோடு வெளியேறினார்கள். குறிப்பாக தமிழக வீரரான ராம்குமார், மிக மோசமாக தோற்றார். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி 2-ஆவது சுற்றில் வீழ்ந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக ராம்குமாருக்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் துணை தலைவரான கார்த்தி ப.சிதம்பரமே, இப்போது அதிருப்தியடைந்துள்ளார். ராம்குமாருக்கு 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வைல்ட் கார்டு கொடுத்துவிட்டோம். ஆனால் அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்த ஆண்டு அவர் தகுதிச்சுற்றின் மூலம் சென்னை ஓபனில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
ரூ.2 கோடி நிதியுதவி: சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்குவது என்பது இரட்டை பலமாகும். ஆனால் இந்தியர்களால் குறைந்தபட்சம் அரையிறுதிக்குகூட முன்னேற முடியவில்லை என்றால், சென்னை ஓபன் போட்டியை நடத்தி என்ன பயன்? அந்தப் போட்டிக்கு தமிழக அரசு ரூ.2 கோடி நிதியுதவி அளிப்பதால் என்ன பயன்?
120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து ஒற்றையர் பிரிவில் விளையாடக்கூடிய திறமை வாய்ந்த ஒரு வீரரைக்கூட உருவாக்க முடியவில்லை என்றால், ஏஐடிஏ என்ன செய்து கொண்டிருக்கிறது?
இந்தியாவில் தலைசிறந்த ஒற்றையர் டென்னிஸ் வீரர்களை உருவாக்கவும், இரட்டையர் பிரிவில் பயஸ்-பூபதிக்குப் பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கவும் ஏஐடிஏ தவறிவிட்டது என்பதுதான் நிதர்சனம். அதனால்தான் 2012 ஒலிம்பிக்கின்போது கருத்து வேறுபாடு காரணமாக கங்கனம் கட்டிக்கொண்டு நின்ற பயஸ், பூபதியிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது ஏஐடிஏ.
கடந்த 10 ஆண்டுகளில் சரியான இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களை பட்டை தீட்டுவதில் ஏஐடிஏ தோல்வியடைந்துட்டது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் ஏடிபி சேலஞ்சர் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்குச் சென்று சேலஞ்சர் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை உள்ளது.
இளம் வீரர்களுக்கு பெரிய அளவில் ஸ்பான்சர் கிடைக்காததால் அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் சேலஞ்சர் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது. இந்தியாவில் அதிகளவில் ரேங்கிங் போட்டிகள் நடைபெற்றாலும், அவை தரமானதாக இல்லை.
சரியான வழிகாட்டுதல் இல்லாததால் ஜூனியர் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று காயமடைகிறார்கள். இதனால் அவர்களின் டென்னிஸ் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. இதேபோல் தரமான பயிற்சியாளர்களும் மிகக் குறைவாகவே உள்ளனர் என்பதே இளம் டென்னிஸ் வீரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இனி வரும் காலங்களில் இந்தியாவில் அதிக அளவில் ஏடிபி சேலஞ்சர் போட்டிகளை நடத்தவும், தேசிய அளவிலான ஜூனியர் போட்டிகளை தரமான முறையில் நடத்தவும் ஏஐடிஏ முயற்சி எடுக்க வேண்டும். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு போதிய பயிற்சியளிப்பது அவசியம். இதுபோன்ற விஷயங்களை செய்யாதபட்சத்தில் இந்திய டென்னிஸுக்கு பயஸ், பூபதி போன்ற தலைசிறந்த வீரர்கள் கிடைக்கமாட்டார்கள்.
ரசிகர்கள் வருகை குறைவு: இந்த முறை சென்னை ஓபனில் இந்தியர்கள் மட்டுமின்றி, உலகின் முன்னணி வீரர்களும் ஆரம்ப சுற்றுகளோடு வெளியேறியதன் எதிரொலியாக மைதானம் வெறிச்சோடியே காணப்பட்டது. வழக்கமாக இறுதி ஆட்டங்களின்போது மைதானம் நிரம்பி வழியும். ஆனால் இந்த முறை கூட்டம் குறைவாகவே இருந்தது. இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் விளையாடாமல் இருந்திருந்தால் இந்த கூட்டமும் வந்திருக்குமா என்பது சந்தேகமே?
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், ரசிகர்களின் வருகை மிக முக்கியம். இந்தியர்கள் அதிக அளவில் விளையாடினால் மட்டுமே ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுப்பார்கள். உலகின் முன்னணி வீரர்களுக்கு அதிக அளவில் போட்டி கட்டணம் கொடுத்து அழைத்து வந்து விளையாட வைப்பதை பெருமையாக கருதுகிறது ஏஐடிஏ. ஆனால் இந்தியர்களால் ஒற்றையர் பிரிவில் சாதிக்க முடியவில்லையே என்பதைப் பற்றி ஏஐடிஏ ஒருபோதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போட்டியில் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு உலகின் முன்னணி வீரர்கள் அவசியம்தான். அதற்காக உள்ளூர் வீரர்களே இல்லாமல் போட்டியை நடத்துவதால் எந்த பயனும் இல்லை. அது இந்திய டென்னிஸின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.
தலைசிறந்த வீரர்களை உருவாக்க முயற்சி எடுக்காமல் இந்தியாவில் ஆண்டுதோறும் ஏடிபி போட்டிகளை நடத்துவதால் மட்டும் இந்திய டென்னிஸை மேம்படுத்த முடியாது என்பதை ஏஐடிஏ உணர்ந்ததாக தெரியவில்லை. பல கோடி ரூபாயை செலவிட்டு சிறப்பாக போட்டியை நடத்தியதற்காக ஏடிபி விருதைப் பெறுவதால் எந்த பயனும் இல்லை. சிறந்த வீரர்களை உருவாக்கினால் மட்டுமே இந்திய டென்னிஸ் வளர்ச்சியடையும். அப்போதுதான் சர்வதேச டென்னிஸில் இந்தியர்கள் முத்திரைப் பதிக்க முடியும் என்பதை ஏஐடிஏ உணர வேண்டிய தருணம் இது!
* உலகின் முன்னணி வீரர்களுக்கு அதிக அளவில் போட்டி கட்டணம் கொடுத்து அழைத்து வந்து விளையாட வைப்பதை பெருமையாகக் கருதுகிறது ஏஐடிஏ. ஆனால் இந்தியர்களால் ஒற்றையர் பிரிவில் சாதிக்க முடியவில்லையே என்பதைப் பற்றி ஏஐடிஏ ஒருபோதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. *
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்! பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல: விக்ரம் துரைசாமி
வாக்குரிமையைப் பறிக்கும் மோடியும் பாஜகவும்: மமதா பானர்ஜி

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

