திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷிகர் தவன் உள்ளே; முரளி விஜய் வெளியே! 

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார்...

News image
Updated On :17 ஜூலை 2017, 10:28 am

எழில்

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். இதையடுத்து ஷிகர் தவனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், கேஎல் ராகுல், முகுந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முழு உடற்தகுதி அடையாததால் முரளி விஜய் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அணியில் ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார். 

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.