டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் சறுக்கல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 2-ஆவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 2-ஆவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
39 வயதான ஹெராத் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 8 முறை தலா 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட், இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆகியோர் 4-ஆவது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 12 இடங்கள் முன்னேறி 26-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிம்பாப்வே கேப்டன் கிரீம் கிரெமர் 20 இடங்கள் முன்னேறி 53-ஆவது இடத்தைப் பிடித்தார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார். முன்னதாக 13-ஆவது இடத்தில் இருந்த அவர், இப்போது 6 இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வேவின் கிரேக் இர்வின் 20 இடங்கள் முன்னேறி 40-ஆவது இடத்தையும், சிக்கந்தர் ராஸா 28 இடங்கள் முன்னேறி 48-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் தனது அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார் சிக்கந்தர் ராஸா. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த குணரத்னே 19 இடங்கள் முன்னேறி 79-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர்களில் சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்திலும், விராட் கோலி 5-ஆவது இடத்திலும், கே.எல்.ராகுல் 10-ஆவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன், இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...