இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வு! கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா!

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :27 நவம்பர் 2017, 11:20 am

எழில்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி டெஸ்டில் விளையாடவுள்ள விராட் கோலி, ஓய்வு காரணமாக ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய ஷிகர் தவன், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல தமிழக வீரர் விஜய் சங்கரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துத் தொடர்களிலுமாக 9-0 என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒய்ட்வாஷ் செய்திருந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்துவருகிறது. 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டிசம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து முதல் ஒருநாள் ஆட்டம் டிசம்பர் 10-ஆம் தேதி தர்மசாலாவிலும், 2-ஆவது ஒருநாள் ஆட்டம் டிசம்பர் 13-ஆம் தேதி மொஹாலியிலும் நடைபெற இருக்கின்றன. 3-ஆவது ஒருநாள் ஆட்டம் டிசம்பர் 17-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 ஆட்டம் கட்டாக்கில் டிசம்பர் 20-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் இந்தூரில் 22-ஆம் தேதியும், 3-ஆவது ஆட்டம் மும்பையில் 24-ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி 

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்எஸ் தோனி, ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பூம்ரா, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.