விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: பாடல் வெளியீடு!

ஃபிஃபா 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 5:43 am

எழில்

இந்தியாவில் முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 28-ஆம் தேதி வரையில் இந்தியாவின் 6 நகரங்களில் - நவி மும்பை, புது தில்லி, கோவா, கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா நடைபெறவுள்ளது. இதில், போட்டியை ஒருங்கிணைக்கும் நாட்டின் அணி என்ற முறையில் இந்திய அணி "ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.

அனைவரும் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது. குவாஹாத்தி மற்றும் நவி மும்பையில் அரையிறுதி ஆட்டங்களும் காலிறுதி ஆட்டங்கள் கோவா, குவாஹாட்டி, கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன. 

அக்டோபர் 6-ம் தேதி புது தில்லி மற்றும் நவி மும்பை ஆகிய இரு நகரங்களிலும் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.

ஃபிஃபா 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டது. ப்ரீதம் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.