கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! அணியில் இடம்பிடித்த ஸ்டோக்ஸ்!

News image
Updated On :27 செப்டம்பர் 2017, 9:36 am

எழில்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெய்க் ஓவர்டன், பென் ஃபோக்ஸ், மேசன் கிரேன் ஆகிய மூன்று புதுமுகங்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், நவம்பர் 23 அன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. ஜனவரி 8 அன்று சிட்னியில் நிறைவுபெறுகிறது. 

இதுவரை நடைபெற்ற 69 ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா 32 முறை வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. ஆகஸ்ட் 2015 வரை நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 130 டெஸ்டுகளையும் இங்கிலாந்து 106 டெஸ்டுகளையும் வெற்றி பெற்றுள்ளன. 89 டெஸ்டுகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 2015-ல் கடைசியாக நடைபெற்ற ஆஷஸ் தொடரை 3-2 என்கிற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், பிரிஸ்டோலில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக கைதாகி விடுதலையானார். அவரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பெர்ஸ்டோவ், ஜேக் பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலாஸ்டர் குக், மேசன் கிரேன், பென் ஃபோக்ஸ், டேவிட் மாலன், கிரெய்க் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.