ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி

ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணி கேப்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 2:52 am IST


ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணி கேப்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பிபிஎல் மும்பை பிரிவு ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பி.வி.சிந்து, புணே 7 ஏஸஸ் அணி கேப்டனும், உலக சாம்பியனுமான கரோலினா மரினை அபாரமாக வீழ்த்தி வென்றிருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்-சென்னை ஸ்மாஷர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் சுங் ஜி ஹியுன் 15-13, 14-15, 15-7 என்ற கேம் கணக்கில் சிந்துவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
வேர்ல்ட் டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத் அணியின் லீ ஹியுன் இல் வென்றார். இரட்டையர் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத்தின் போடின் இஸாரா-கிம் சே ரங் இணை சென்னை அணிவீரர்களை வென்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.