பந்த்-தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு தரவே தோனிக்கு டி20 ஆட்டங்களில் சிறிது ஓய்வு தரப்பட்டது என தேர்வாளர்கள் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
மே,இ.தீவுகள், ஆஸி. அணிகளுடன் நடைபெற்ற டி20 தொடர்களில் தோனி இடம் பெறவில்லை. இது சர்ச்சையை கிளப்பியது. தோனிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது என தேர்வாளர் குழு கூறியிருந்தது.
தற்போது நியூஸியுடன் பிப்ரவரியில் நடக்கவுள்ள டி20 தொடரில் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிரசாத் கூறியதாவது-
ரிஷப் பந்த்-தினேஷ் கார்த்திக் ஆகியோர் மேலும் சில ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பை உருவாக்க தோனிக்கு 6 ஆட்டங்களில் ஓய்வு தரப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறிய நிலையில் தோனி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் தற்போதைய டெஸ்ட் தொடருக்கு பின் சிறிது ஓய்வு தர உள்ளோம். அதன் பின் அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பார். உலகக் கோப்பை 2019 போட்டிகள் நெருங்கி வருவதால், சில ஒரு நாள் ஆட்டங்களே நடக்க உள்ளன. இதற்காக 20 பேர் கொண்ட அணியை வகைப்படுத்தியுள்ளோம். அந்த 20 பேரே தற்போதைய தொடர்களில் இடம் பெற்றுள்ளனர்.
ஜடேஜா முழு தகுதி:
ஆல் ரவுண்டர் ஜடேஜா முழு உடல் தகுதியுடன் தான் ஆஸி. சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். எந்த வீரர் தேர்வாக இருந்தாலும், தேர்வுக் குழு அவரது உடல்தகுதி குறித்த முழு அறிக்கையை வழங்குகிறது. ஜடேஜாவும் தகுதியுடன் தான் உள்ளார். அதனால் அவரை தேர்வு செய்தோம். இதனால் óவர் தகுதி குறித்த எந்த கேள்வியும் எழவில்லை என்றார் பிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









