ஒருநாள் போட்டி: தெ.ஆ. பேட்டிங்! ரஹானேவுக்கு வாய்ப்பு!
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில்...


தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றாத இந்தியா, சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என இழந்தது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதே கனவு தொடரும் நிலையில், இந்தத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 21 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும், கடந்த 2016 ஜனவரிக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுமாக அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியே காணாதது அணிக்கான பலம்.
தொடர் வெற்றிக் கனவு ஒருபுறம் இருக்க, ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பும் இந்தத் தொடரின் மூலம் இந்தியாவுக்கு உள்ளது. 6 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை 4-2 என இந்தியா வென்றால், முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி, இந்திய முதல் அணியாக மாறும். டர்பனின் கிங்ஸ்மீட் மைதானத்தில் இதுவரை 7 ஆட்டங்களில் தென்
ஆப்பிரிக்காவுடன் மோதியுள்ள இந்தியா, ஒரு வெற்றியை கூட சுவைத்ததில்லை. 6 ஆட்டங்களில் தோற்ற நிலையில், ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கோலி, ரஹானே, தோனி, கெதர் ஜாதவ், பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், பூம்ரா, சஹால் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...