/

ஆரோன் ஃபிஞ்ச் சதம்: ஆஸ்திரேலியா 270 ரன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது...

News image
Updated On :19 ஜனவரி 2018, 7:30 am

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 5 ஒரு நாள் ஆட்டங்களைக் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 35, ஸ்மித் 18, மிட்செல் மார்ஷ் 36 கேரே 27 ரன்கள் எடுக்க, தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 106 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடாததால் ஆஸ்திரேலிய அணி கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.