மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டெஸ்ட்: கேப்டன் விராட் கோலியின் விநோத சாதனை!

இரு மாற்றங்களைச் செய்ததன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி விநோத சாதனைக்கு ஆளாகியுள்ளார்...

News image
Updated On :24 ஜனவரி 2018, 10:49 am

எழில்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். பார்தீவ் படேல் இந்த டெஸ்டிலும் இடம்பெற்றுள்ளார். பாண்டியா உள்ளிட்ட 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இன்றைய டெஸ்டில் இரு மாற்றங்களைச் செய்ததன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி விநோத சாதனைக்கு ஆளாகியுள்ளார். இது அவர் தலைமை வகிக்கும் 35-வது டெஸ்ட். இந்த 35 டெஸ்டுகளிலும் அவர் அணியில் ஏதாவதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் அணியில் இடம்பிடித்த பாண்டியா, பூம்ரா மட்டுமே இதுவரை அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அதேபோல விக்கெட் கீப்பர் சாஹாவும். இதர வீரர்கள் அனைவருமே அணியிலிருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அணியில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி.

டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக மாற்றம் செய்த கேப்டன்கள்

35 - விராட் கோலி 
34 - முஷ்ஃபிகர் ரஹிம் 
31 - ரே இல்லிங்வொர்த் 
25 - வாசிம் அக்ரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.