அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஐபிஎல் போட்டிக்குத் தேர்வான தமிழக வீரர்களும் ஏமாற்றம் அடைந்தவர்களும்!

எனினும் இந்த எட்டு பேரில் இரண்டு பேர் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள்...

News image
Updated On :29 ஜனவரி 2018, 9:03 am

எழில்

11-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் எட்டு தமிழக வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்துள்ளன. எனினும் இந்த எட்டு பேரில் இரண்டு பேர் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோரை சென்னை அணி தேர்வு செய்யாதது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் 2018 - தமிழ்நாட்டு வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி  
3. விஜய் சங்கர் - தில்லி ரூ. 3.20 கோடி 
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி 
5. எம். அஸ்வின் - பெங்களூர் - ரூ. 2.20 கோடி
6. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி 
7. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம் 
8. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம் 

(கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் நடராஜன் ரூ. 3 கோடிக்கும் எம். அஸ்வின் ரூ. 1 கோடிக்கும் சஞ்சய் யாதவ் ரூ. 10 லட்சத்துக்கும் தேர்வானார்கள்.)

Story image

இந்த ஐபில் ஏலம் தமிழக வீரர்கள் சிலரை ஏமாற்றமடையவும் செய்துள்ளது. இளம் வீரர் பாபா அபரஜித்தும் அவரது சகோதரர் இந்திரஜித்தும் எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. அபினவ் முகுந்த், ரஹில் ஷா, அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் போன்ற தமிழக வீரர்களையும் எந்த அணியும் சீந்தவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.