அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஐபிஎல் சமயத்தில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ள புஜாரா!

இந்திய வீரர்கள் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல்-லில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் இங்கிலாந்துக்குச் சென்று கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில்...

News image
Updated On :30 ஜனவரி 2018, 11:11 am

எழில்

கிட்டத்தட்ட 100 சதவிகித இந்திய வீரர்களும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல்-லில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் இங்கிலாந்துக்குச் சென்று கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறவுள்ளார் புஜாரா. 

ஏப்ரல் 7 முதல் யார்க்‌ஷையர் அணிக்காக புஜாரா விளையாடவுள்ளதை அந்த அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இடையில் ஜுன் 14-18-ல் இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக இந்தியா திரும்பும் புஜாரா மீண்டும் ஜுன் 20 முதல் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் கலந்துகொள்கிறார். அதன்பின்பு ஆகஸ்ட் 1 முதல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புஜாரா பங்கேற்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தபிறகும் யார்க்‌ஷையர் அணிக்காக கவுன்டி போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார். 

யார்க்‌ஷையர் அணியில் புஜாரா, கேன் வில்லியம்சன் என இரு வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளார்கள். கடந்த வருடம் நாட்டிங்ஹேம்ஷையர் அணிக்காக விளையாடினார். 12 இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்தார். அதற்கு முன்பு டெர்பிஷையர், யார்க்‌ஷையர் அணிகளுக்காக விளையாடிய புஜாரா யார்க்‌ஷையர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனையொட்டி கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளார் புஜாரா. இதனால் மற்ற வீரர்களை விடவும் புஜாரா இங்கிலாந்து தொடருக்கு நன்குத் தயாராகவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.