ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆசியப் போட்டிக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு

ஜாகர்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் வெ

News image
இந்திய ஆடவர் ஹாக்கி அணி.
Updated On :9 ஜூலை 2018, 7:38 pm

DIN

ஜாகர்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் இந்திய அணி அடுத்து ஆகஸ்டில் ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. 
கோல்கீப்பர் பிஆர்.ஸ்ரீஜேஷ் தலைமையிலான 18 பேர் கொண்ட அணியில் பெனால்டி கார்னர் நிபுணர் ரூபிந்தர் பால் சிங், முன்கள வீரர் அகஷ்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சிங்கலெசெனா சிங் துணைக் கேப்டனாக உள்ளார். 
கடந்த 2014 இன்சியானில் நடந்த ஆசியப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் தங்கம் வென்றால், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம். 
அணி விவரம்: பிஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷண் பி பதக், ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால் சிங், அமித் ரோஹிதாஸ், மன்பிரீத் சிங், சிங்கலெசெனா சிங், சிம்ரஞ்சித் சிங், சர்தார் சிங், விவேக்சாகர் பிரசாத், எவி.சுனில், மந்தீப் சிங், அகஷ்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங்.
இதுதொடர்பாக அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில்: 
அணியின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. ரமண்தீப் சிங் இல்லாதது சிறிது இழப்பு தான். எனினும் ரூபிந்தர் பால், அகஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்துள்ளது சாதகமான அம்சம். பெங்களூருவில் தேசிய முகாம் நடைபெறும். 
தென்கொரியாவுடன், நியூஸிலாந்துடன் 5 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.