

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் டர்பனில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. ஆனால் இந்த டெஸ்டில் 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர் என்கிடியை நீக்கிவிட்டு பேட்ஸ்மேனான தியுனிஸ் டி பிரைனைத் தேர்வு செய்துள்ளது தெ.ஆ. அணி. இது அவருடைய 4-வது டெஸ்ட் ஆட்டமாகும். பிளாண்டர், மார்கல், ரபடா, மகாராஜ் என நான்கு பந்துவீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடர் நான்காவது டெஸ்டுடன் ஏப்ரல் 3 அன்று நிறைவுபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.