மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!

இதன்பிறகு இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது டேனியைச் சந்தித்தார் கோலி... 

News image
Updated On :13 மார்ச் 2018, 6:00 am

எழில்

இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட், திடீரென ட்விட்டர் வழியாக விராட் கோலியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

விராட் என்னைத் திருமணம் செய்துகொள்.

2014 டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி 72 ரன்கள் எடுத்தார். இதனால் பரவசமான டேனி ட்விட்டர் வழியாகக் காதல் விண்ணப்பத்தை அளித்தார்.

அதன்பிறகு என்னை செல்போனை எடுத்துப் பார்த்தால் ஏகப்பட்ட ரீட்வீட்கள், மின்னஞ்சல்கள். இந்திய ஊடகங்கள் என்னைப் பற்றிய செய்திகள் என்று 2014-ல் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூர்கிறார் டேனி.

இதன்பிறகு இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது டேனியைச் சந்தித்தார் கோலி. 

நீங்கள் இதுபோல ட்விட்டரில் செய்யக்கூடாது. மக்கள் அதை உண்மையென எடுத்துக்கொள்வார்கள் என்று டேனிக்கு அறிவுறுத்தியுள்ளார் கோலி. நான் அவரிடம் ஓ, அப்படியா, மன்னித்துக்கொள்ளுங்கள் என்றவாறு பதிலளித்தேன் என்கிறார் டேனி. தன்னுடைய மிகப்பெரிய ரசிகை என்பதால் டேனிக்குத் தன்னுடைய பேட்களில் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் கோலி. 

இந்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 போட்டியில் கோலி எனக்குப் பரிசாக வழங்கிய பேட்டைப் பயன்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார் 26 வயது டேனி.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.