இந்திய அணிக்கு எதிராக 350 ரன்கள் குவித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணி!
நேற்று, இந்திய அணிக்குக் கிடைத்ததுபோல இன்றைய தினம் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்துள்ளது.


நேற்று, இந்திய அணிக்குக் கிடைத்ததுபோல இன்றைய தினம் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இதன் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 முதல் 10-ஆம் தேதி வரை அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை எடுத்துள்ளது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. லெவன் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்களை எடுத்திருந்தது. டி ஆர்சி ஷார்ட் 10, மேக்ஸ் பிரையன்ட் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் அணி, 3-ம் நாள் முடிவில் 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர்கள் ஷார்ட் 74, பிரையண்ட் 62 ரன்கள் எடுத்தார்கள். விக்கெட் கீப்பர் நீல்சன் 56, ஹார்டி 69 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டத்தில், கேட்ச் பிடிக்க முயன்றபோது இந்திய இளம் வீரர் பிருத்வி ஷா-வின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிருத்வி ஷாவைத் தூக்கிக்கொண்டு ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் செய்துபார்த்தபோது தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பிருத்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...