கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அமிருதசரஸ் ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அஃப்ரிடி: கெளதம் கம்பீர் பாராட்டு!

அமிருதசரஸ் ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாராட்டு... 

News image
Updated On :26 அக்டோபர் 2018, 12:23 pm

எழில்

அமிருதசரஸ் ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமிருதசரஸ் அருகே கடந்த 19ம் தேதி தசரா நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் ரயில் தண்டவாளம் மீது நின்று ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இத்துயர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ட்விட்டரில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி கூறியதாவது: மிகவும் மோசமான சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள். இந்த இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வர அல்லா அவர்களுக்கு மனவலிமை அளிப்பார். அல்லா நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

அஃப்ரிடியின் இரங்கல் குறித்து ட்விட்டரில் கம்பீர் கூறியதாவது:

எனக்கும் அஃப்ரிடிக்கும் முன்பு மோதல் நடந்த வரலாறு இருக்கலாம். ஆனால் அமிருதசரஸ் ரயில் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்ததற்கு அவரைப் பாராட்டுகிறேன். இந்தியர்கள் அனைவரும் அவருடைய இந்தக் குணத்தைப் பாராட்டுவார்கள். இரங்கல் தெரிவித்த சோயிப் அக்தருக்கும் நன்றி என்று கூறியுள்ளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.