4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மேல்முறையீட்டு வாய்ப்பு: ஏஐபிஏ முடிவு

குத்துச் சண்டை போட்டிகளில் நடுவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகள் வழங்கியிருப்பதாக சந்தேகிக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை கொண்டுவர சர்வதேச குத்துச்சண்டை

Updated On :3 செப்டம்பர் 2018, 1:08 am


ஜகார்த்தா: குத்துச் சண்டை போட்டிகளில் நடுவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகள் வழங்கியிருப்பதாக சந்தேகிக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை கொண்டுவர சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) முடிவு செய்துள்ளது.
போட்டி முடிவுகள் நியாயமாக இருப்பதையும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நிகழ்ந்ததைப் போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தடுப்பதையும் உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐபிஏவின் நிர்வாக இயக்குநர் டாம் விர்கெட்ஸ் கூறுகையில், "போட்டிகளின்போது சர்ச்சைக்குரிய நடுவர் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க உள்ளோம்' என்றார்.
இந்தோனேஷியாவில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை இறுதிச்சுற்று ஒன்றில் வட கொரிய-சீன வீரர்கள் மோதினர். 
அதில் சீன வீரர் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. நடுவர்களின் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரிய வீரரின் பயிற்சியாளர்கள் இருவர், குத்துச்சண்டை களத்தை விட்டு வெளியேற மறுத்தனர்.
இதையடுத்து போலீஸாரின் உதவியோடு அவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களுக்கான ஆசியப் போட்டி அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.